சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மாநிலங்களுக்கு இடையேயான களப்பயணம் - ஒடிசா ஊடகக் குழு புதுச்சேரி ஜிப்மர் வருகை

இடுகை இடப்பட்ட நாள்: 04 SEP 2026 6:07PM by PIB Chennai

ஊடகவியலாளர்கள், பத்திரிகை தகவல் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய 11 பேர் கொண்ட ஒடிசா ஊடகக் குழுவினர், இன்று (04.09.2026) புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மர்-ஐ பார்வையிட்டனர். மத்திய அரசின் முன்முயற்சியான மாநிலங்களுக்கு இடையேயான ஊடகக் களப்பயணத்தின் ஒரு பகுதியாக, சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேம்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு, மருத்துவப் பணியில் சாதனைகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதே இந்த களப் பயணத்தின் நோக்கமாகும்.

இந்த களப் பயணத்தின் போது, ஜிப்மர் இயக்குநர் டாக்டர் விர் சிங் நேகி, மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ் வினோத்குமார் ஆகியோருடன் ஊடகக் குழுவினர் கலந்துரையாடினர். உயர்தர, சிறப்பு மருத்துவச் சேவைகள், மருத்துவக் கல்வி மற்றும் உயிரி-மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றை வழங்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்ற முறையில் ஜிப்மரின் முக்கியப் பங்கை அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு விளக்கினர்.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள முக்கியப் பிரிவுகளான வெளிநோயாளிகள் பரிசோதனை பிரிவு, சிறப்பு மருத்துவப் பிரிவு, பெண்கள் - குழந்தைகள் மருத்துவமனை, பிராந்திய புற்றுநோய் மையம், அணு மருத்துவப் பிரிவுகள் ஆகியவற்றை ஊடகக் குழுவினர் பார்வையிட்டனர். ஜிப்மரின் நோயாளிகளுக்கான சேவைகள், அரசு மருத்துவக் காப்பீட்டு வசதிகள், தொலை-மருத்துவ தொழில்நுட்பம் ஆகியவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. சிறப்பு மருத்துவச் சேவைகள், மருத்துவ ஆராய்ச்சி ஆகியவை குறித்த ஊடகக் கலந்துரையாடலுடன் இந்த நிகழ்வு நிறைவடைந்தது.

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2306806) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English