அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புத்தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை; உயிரி தொழில்நுட்ப முதலீட்டை அதிகரிக்க 'பையோ-நிவேஷ்' திட்டம் தொடக்கம்.
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2026 5:29PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நாட்டின் இளம் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் முன்னணி முதலீட்டாளர்களுடன் இணைந்து ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
இந்தியாவில் உயிரி தொழில்நுட்பத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், 'பயோ-நிவேஷ்' என்ற புதிய முதலீட்டுத் தளத்தை அவர் இந்த கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக உயிரி தொழில்நுட்பத் துறை மிகப்பெரிய எழுச்சியைக் கண்டு வருகிறது. இருப்பினும், பல இளம் கண்டுபிடிப்பாளர்களுக்குத் தங்கள் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தவும், வணிக ரீதியில் பெரிய அளவில் வெற்றி பெறவும் போதுமான முதலீடுகள் கிடைப்பதில் சில சவால்கள் உள்ளன. இந்த இடைவெளியை முழுமையாக நிரப்பும் வகையில்தான் 'பயோ-நிவேஷ்' தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது புத்தாக்க நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இடையே ஒரு நேரடிப் பாலமாகச் செயல்படும்.
இந்தக் கூட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து புத்தொழில் நிறுவனங்களின் தலைவர்களும், முன்னணி முதலீட்டாளர்களும் கலந்துகொண்டனர். புதிய கண்டுபிடிப்புகளுக்கு எளிதில் நிதியுதவி பெறுவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்துவது மற்றும் அரசு வழங்கும் சலுகைகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அரசு மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சியால் மட்டுமே இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்த முடியும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய 'பயோ-நிவேஷ்' முன்முயற்சி மூலம் ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பல முக்கியப் பிரச்சனைகளுக்கு அறிவியல் ரீதியான எளிய தீர்வுகளைக் காணவும் முடியும் என வலுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2306405®=3&lang=1
செய்திக்குறிப்பு அடையாள எண்: 2306405
****
SS/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306584)
வருகையாளர் எண்ணிக்கை : 8