ஜவுளித்துறை அமைச்சகம்
இந்தியா – பிரான்ஸ் இடையே ஜவுளி, ஆடை அலங்கார துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த பாரத் ஜவுளி வர்த்தகக் கூட்டமைப்பு, பிரிமியர் விஷன் எஸ்ஏ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2026 4:43PM by PIB Chennai
உலகளாவிய ஆடை அலங்கார, ஜவுளித் துறையின் சூழலில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில் பாரத் ஜவுளி வர்த்தகக் கூட்டமைப்பு, படைப்பாற்றல்மிக்க ஆடை அலங்கார, ஜவுளி, மூலப்பொருள் சேகரிப்பிற்கான உலகின் முன்னனி சர்வதேச தளங்களில் ஒன்றான பிரிமியர் விஷன் எஸ்ஏ ஆகியவை 2026 செப்டம்பர் 2 அன்று பாரிசில் நடைபெற்ற பிரிமியர் விஷன் கண்காட்சியின் போது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தில் பாரத் ஜவுளி வர்த்தகக் கூட்டமைப்பின் முக்கிய குழு உறுப்பினரும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் தலைவருமான டாக்டர் ஏ சக்திவேல், பிரிமியர் விஷன் எஸ்ஏ-வின் ஆடை அலங்காரப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி ஃபுளோரன்ஸ் ரூசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306364®=3&lang=1
***
SS/IR/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306522)
வருகையாளர் எண்ணிக்கை : 8