மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா மக்களுக்கு ஜென்மாஷ்டமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 SEP 2026 5:01PM by PIB Chennai

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா மக்களுக்கு ஜென்மாஷ்டமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனும் மங்களகரமான நன்நாளில்நாட்டின் அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரின் எண்ணற்ற பக்தர்களிடையேஅவர் மீதான பக்தியும் அன்பும் எல்லையற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மகாபாரதம் கடமைஅறநெறிநீதிஞானம், துணிச்சல், வாழ்க்கையில் சமநிலை குறித்தக் காலத்தால் அழியாத வழிகாட்டுதலை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தச் செய்தி பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்திற்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என்றும் பகவத் கீதை நாட்டின் தத்துவ மரபின் ஆன்மாவாகக் கருதப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு கடினமானச் சூழ்நிலைகள் இருந்தாலும்சத்தியத்திலும் நீதியிலும் உறுதியாக நிற்பவரே இறுதியில் வெற்றி பெறுவார் என்று ஸ்ரீ கிருஷ்ணர் நமக்குக் கற்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜென்மாஷ்டமி அன்றுஸ்ரீ கிருஷ்ணரின் ஆசீர்வாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாகவும், நமது நாடும் சமூகமும் சத்தியம்நீதி, மனிதாபிமானத்தின் பாதையில் தொடர்ந்து முன்னேறட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306381&reg=3&lang=1

***

SS/IR/GS/SH  


(வெளியீட்டு அடையாள எண்: 2306518) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada