சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சட்ட அமைச்சகம் நடத்திய தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் பங்கேற்றனர்

இடுகை இடப்பட்ட நாள்: 03 SEP 2026 4:21PM by PIB Chennai

2026-ம் ஆண்டு தேசிய விளையாட்டு தினத்தைக் கொண்டாடும் வகையில் மத்திய சட்டம், நீதி அமைச்சகத்தின் சட்டம் இயற்றும் துறை, சட்ட விவகாரத் துறை ஆகியவை இணைந்து புதுதில்லி தல்கட்டோரா மைதானத்தில் 2026 செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் விளையாட்டு நிகழ்வுகளை நடத்தின. உடல் தகுதி, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, குழுப்பணி, ஆகியவற்றை ஊக்குவிக்கும் கூட்டு முயற்சியாக அமைந்த இந்நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் ஒருங்கிணைந்து பங்கேற்றனர்.

மகளிர் கிரிக்கெட், ஆடவர் கிரிக்கெட், ஆடவர், மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், கயிர் இழுக்கும் போட்டி, மகளிருக்கான எலுமிச்சை ஓட்டப் போட்டி, பந்துவீசுதல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306355&reg=3&lang=1

***

SS/IR/GS/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2306514) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी