சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கு நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 03 SEP 2026 1:00PM by PIB Chennai

தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் நான்கு பள்ளிகளில் ஜிக்யாசா அடல் இரண்டு நாள் பயிலரங்கு 2026 செப்டம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற்றது. சிஎஸ்ஐஆர் சென்னை வளாகத்துடன் இணைந்து சிஎஸ்ஐஆர் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

உரையாடல் சார்ந்த இப்பயிலரங்கு மேலனிக்குழி அரசு மேல்நிலைப் பள்ளி, செந்துரை அரசு ஆடவர் மேல்நிலைப் பள்ளி, கோடலிகருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி, கொல்லபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. அடல் சிந்தனை ஆய்வகம் அணுகல் மற்றும் வழிகாட்டல் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த முன்முயற்சியில் சுமார் 300 மாணவர்களும், 30 ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

அறிவியல் ஆர்வத்தையும், செய்முறைக் கற்றலையும் வளர்க்கும் வகையில் அறிவியல் சார்ந்த விரிவுரைகள், நேரடிச் செயல்முறை விளக்கங்கள், நேரடிப் பரிசோதனைகள் ஆகியவை நடத்தப்பட்டன.

மாணவர்கள் நாள்தோறும் பயன்படுத்தப்படும் பொருட்களைக் கொண்டு எல்இடி பல்புகளுக்கு மின்சாரம் செலுத்த எளிய மின்கலன்களை உருவாக்கினார்கள். அத்துடன், செப்புக் கம்பி, பாதுகாப்பு ஊசிகள், கையடக்க மின்கலன்களைப் பயன்படுத்தி இயங்கும் டிசி மோட்டார்களையும் தயாரித்தனர்.

டாக்டர் எஸ் மகேஸ்வரன், டாக்டர் ஜி எஸ் அய்யப்பன், டாக்டர் ஏ ஆபிரகாம், டாக்டர் டி கல்பனா, டாக்டர் ஜி சரவணன், டாக்டர் எஸ் சுந்தர் குமார், திரு ஆர் டி சதீஷ் குமார் உள்ளிட்ட மூத்த சிஎஸ்ஐஆர் விஞ்ஞானிகள், இதில் கலந்து கொண்டு அறிவியல் தீர்வுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்கள்.

***

SS/IR/GS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2306328) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English