அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறுசுழற்சி செய்யப்பட்ட தார் சாலைத் தொழில்நுட்பம்
இடுகை இடப்பட்ட நாள்:
02 SEP 2026 8:21PM by PIB Chennai
இந்தியாவில் நிலையான, சுழற்சி முறையிலான சாலைக் கட்டுமானத்தை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சிஎஸ்ஐஆர்-மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர் - சிஆர்ஆர்ஐ), ஓரியண்டல் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஓம்ஸ் பாலிமர் மாடிஃபைட் பிட்டுமென் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து, சென்னை–திருப்பதி தொகுப்பு-I-ல் உள்ள தேசிய நெடுஞ்சாலை-716-ல், அடர்த்தியான பிட்டுமினஸ் மெக்கடம் எனப்படும் கலவை அடுக்கில் 60% மறுசுழற்சி செய்யப்பட்ட தார் பயன்பாட்டை (ஆர்ஏபி) வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளன.
நெடுஞ்சாலை கட்டுமானச் சூழல்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட தார் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இந்த செயல்விளக்கம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழ்நாடு அரசு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளுடன், நெடுஞ்சாலை கட்டமைப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செயல்விளக்கம், மறுசுழற்சி தார் பதனப்படுத்துதல், மூலப்பொருள் பண்புக்கூறு கண்டறிதல், புத்துயிரூட்டல், கலவை வடிவமைப்பு, சூடான கலவை உற்பத்தி உள்ளிட்ட முழுமையான உயர் மறுசுழற்சி செயல்முறையை காட்சிப்படுத்தியது.
தேசிய நெடுஞ்சாலை - 716-ல் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த செயல்விளக்கமானது, சாலைப் பொருட்களைக் கழிவிலிருந்து மதிப்புமிக்க பொறியியல் வளங்களாக மாற்றுவதில் அறிவியல் சார்ந்த மறுசுழற்சி தொழில்நுட்பங்களின் ஆற்றலை வலுப்படுத்துகிறது. ஆராய்ச்சி நிறுவனங்கள், நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவை இந்தியாவில் பசுமையான, திறன் வாய்ந்த நெடுஞ்சாலைக் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த முடியும் என்பதை இந்த முயற்சி நிரூபிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2306102®=3&lang=1
(Release ID : 2306102)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306136)
வருகையாளர் எண்ணிக்கை : 9