அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அசாம் சட்டப் பேரவைத் தலைவர், மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 02 SEP 2026 4:01PM by PIB Chennai

அசாம் சட்டப் பேரவைத் தலைவர் திரு ரஞ்சித் குமார் தாஸ், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்து, அசாமின் வளர்ச்சிப் பயணம் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, டாக்டர் ஜிதேந்திர சிங், அசாமில் நடைபெற்று வரும் அதிவேக வளர்ச்சியை எடுத்துரைத்தார். மேலும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலையீட்டின் மூலம் மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டுகளில் மாநிலத்தில் காணப்பட்ட வளர்ச்சி வேகத்தை அவர் எடுத்துரைத்தார்.

வடகிழக்குப் பிராந்தியத்தில் புத்தாக்கம், அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305915&reg=3&lang=1

-----

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2306077) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali-TR , Assamese