சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மதுரையில் தொலைத்தொடர்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம்
இடுகை இடப்பட்ட நாள்:
02 SEP 2026 7:09PM by PIB Chennai
_20260902191217_63fc47.jpeg)
மத்திய தொலைத்தொடர்புத் துறையின் சென்னை முதன்மைத் தொலைத்தொடர்புக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் சார்பில், தொலைத்தொடர்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் 2026 ஆகஸ்ட் 28 அன்று நேரடி மற்றும் காணொலி வாயிலாக நடத்தப்பட்டது.
_20260902191228_ea0152.jpeg)
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உரிமக் கட்டணப் பிரிவுக்கான இணைத் தொலைத்தொடர்புக் கணக்குக் கட்டுப்பாட்டாளர், தொலைத்தொடர்பு உரிம ஒப்பந்தங்களின் நிதி சார்ந்த விதிமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் குறித்து விளக்கமளித்ததுடன், இணையச் சேவை வழங்குநர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விரிவான விளக்கங்களை வழங்கினார். முதல் காலாண்டுக்கான உரிமக் கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்தியது, ஆவணங்களை உரிய நேரத்தில் சமர்ப்பித்தது மற்றும் வங்கி உத்தரவாதங்களை உரிய காலத்தில் புதுப்பித்தது ஆகியவற்றின் அடிப்படையில், விதிமுறைகளைச் சிறப்பாகப் பின்பற்றிச் செயல்பட்ட முன்னணி இணையச் சேவை நிறுவனங்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.
_20260902191240_c87c95.jpeg)
இதனைத் தொடர்ந்து, 2026 ஆகஸ்ட் மாதத்திற்கான தொலைத்தொடர்பு ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் மதுரையில் நடைபெற்றது. இதில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சங்கங்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட 36 கோரிக்கை மனுக்களும் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டு, உரிய அரசு விதிகளின்படி முழுமையாகத் தீர்வு காணப்பட்டன. மேலும், இந்த முகாமின் போது புதிதாகப் பெறப்பட்ட கூடுதல் மனுக்களும் அடுத்தகட்ட நடவடிக்கைக்காகப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
***
SS/SE/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306067)
வருகையாளர் எண்ணிக்கை : 12