சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னையில் அஞ்சலகக் குறைதீர்ப்பு முகாம் 2026 செப்டம்பர் 15 அன்று நடைபெற உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 4:02PM by PIB Chennai

அஞ்சல் துறை சார்பில் மண்டல அளவிலான வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம் சென்னை மண்டல அலுவலகத்தில் 2026 செப்டம்பர் 15 அன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளது.

அஞ்சலக முதுநிலைக் கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை கோட்டம், சென்னை 600002 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சல் அலுவலக முதுநிலைக் கண்காணிப்பாளரால் நடத்தப்படவுள்ளது. இந்தக் குறை தீர்ப்பு முகாமில் அஞ்சல் துறை சார்ந்த தயாரிப்புகள், சேவைகள் குறித்தத் தனிப்பட்டக் குறைகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

புகார் என்பது தபாலில் அனுப்பப்பட்டப் பொருளைப் பற்றியது என்றால், அந்தப் புகார் அஞ்சலிடப்பட்ட தேதி, நேரம், அனுப்புநர் / பெறுநர் குறித்த முழு முகவரி, தேதியுடன் கூடிய ரசீது எண் உள்ளிட்ட முழு விவரங்களையும், பணவிடை, மதிப்புமிக்க பார்சல், காப்பீடு செய்யப்பட்ட, விரைவுத் தபால் பொருட்கள் என்றால் பதிவு செய்யப்பட்ட அலுவலக விவரங்களையும் கொண்டிருக்க வேண்டும்.

சேமிப்புத் திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு அல்லது ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்களாக இருந்தால் கணக்கு எண் / பாலிசி எண், பெயர் மற்றும் டெபாசிட் செய்தவரின் முழு முகவரி, அஞ்சலகப் பெயர், தபால் துறைக்கு அனுப்பப்பட்ட தகவல் விவரம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் தங்களது குறைகள் குறித்து ஏற்கனவே அஞ்சல் அலுவலகங்களில் தெரிவித்து அதற்குத் தீர்வுகாணப்படாத நிலையில், இந்தக் குறைதீர்ப்பு முகாமில் தெரிவிக்கலாம். புதிய புகார்கள் இந்தக் குறைதீர்ப்பு முகாமில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை விரைவு தபால் மூலம் உதவி இயக்குநர், அஞ்சல் அலுவலக முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர மண்டலம், சென்னை-600002 என்ற முகவரிக்கு 2026 செப்டம்பர் 8-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அஞ்சல் உறை மேல் மண்டல குறைதீர்ப்பு முகாம் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்

தனியார் அஞ்சல் சேவை மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. pg.chennaicity@indiapost.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் புகார்களை அனுப்பலாம்.

***

SS/IR/PS/SM    

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2305484) வருகையாளர் எண்ணிக்கை : 21
இந்த வெளியீட்டை படிக்க: English