ஆயுஷ்
ஹோமியோபதியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்த தேசிய கருத்தரங்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
31 AUG 2026 5:44PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்தியக் குழுவின் கீழ் இயங்கும் கோட்டயத்தில் உள்ள மனநலத்திற்கான தேசிய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனம், "மருத்துவப் பயிற்சி மற்றும் ஹோமியோபதியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு" குறித்த தேசிய கருத்தரங்கை இன்று நடத்தியது. "நுண்ணறிவு, கருணையின் சங்கமம்” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கில், சுகாதாரம் மற்றும் ஹோமியோபதி ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் வளர்ந்து வரும் பயன்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மத்திய ஆயுஷ் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ், காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை, குறிப்பாக ஹோமியோபதி துறையில் அதன் ஆக்கப்பூர்வமான பயன்பாடு குறித்த விவாதங்களின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மனநல மருத்துவம் மற்றும் மனநலம் சார்ந்த துறைகளில் கல்விசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுடன் ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், பல்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பிற்காக, எட்டுமனூர் சேவாபாரதியுடனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2305080®=3&lang=1
****
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305269)
வருகையாளர் எண்ணிக்கை : 6