பாதுகாப்பு அமைச்சகம்
விமானப் படை சார்பில் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன் போட்டி சண்டிகரில் தொடக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
31 AUG 2026 5:36PM by PIB Chennai
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள தலைசிறந்த ஸ்குவாஷ் திறமையாளர்கள் பங்கேற்கும் சர்வதேச போட்டி, சண்டிகர் விமானப்படைத் தளத்தில் தொடங்கியது. விமானப்படை சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2026, என்ற இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் விமானப்படைத் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ பி சிங் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
பல்வேறு நாடுகளிடையே தோழமை, பரஸ்பர மரியாதை, நட்பை வளர்ப்பதில் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
இந்த போட்டி, 2026 செப்டம்பர் 04 வரை நடைபெறும். இதில், இங்கிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு சர்வதேச அணிகள் உட்பட ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டியில், குழுப் போட்டிகள், ஒற்றையர் பிரிவு ஆகிய இரண்டும் இடம்பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305062®=3&lang=1
(Release ID : 2305062)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305219)
வருகையாளர் எண்ணிக்கை : 9