புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசியக் கணக்குகள் புள்ளியியல் 2026 விவரங்களை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 3:55PM by PIB Chennai

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் 2022 – 23-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, தேசியக் கணக்குகள் புள்ளியியல் 2026-ஐ வெளியிட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தின் தேசிய வருவாய், உற்பத்தி, செலவினம், இதர முக்கிய பேரியல் பொருளாதாரக் குறியீடுகள் குறித்து விரிவான மதிப்பீடுகளை அளிக்கிறது.

இந்தியப் பொருளாதாரத்தின் செயல்பாடு, கட்டமைப்பு மாற்றங்களை மதிப்பிடுவதற்கு, கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பகுப்பாய்வாளர்கள், இதர சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு இது ஒரு முக்கியத் தகவல் களஞ்சியமாக அமைகிறது.

இந்த வெளியீடு 2022–23, 2023–24 ஆகிய நிதியாண்டுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட இறுதி மதிப்பீடுகள், 2024–25-ம் ஆண்டிற்கான முதலாவது திருத்தப்பட்ட மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் 60 அறிக்கைகளை அளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304948&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305164) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी