அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

குவாண்டம் உயிரித் தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாடு மும்பையில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 4:41PM by PIB Chennai

இந்தியாவின் தேசிய குவாண்டம் இயக்கத்திற்கு இணங்க, குவாண்டம் அறிவியலை நோயறிதல், உயிர்மருத்துவப் படமாக்கல், மருந்து கண்டுபிடிப்பு, துல்லிய மருத்துவம் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்துவதற்காக, குவாண்டம் உயிரித் தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாடு அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் குவாண்டம் அறிவியல், உயிரி அறிவியல் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், தொழில்துறைத் தலைவர்கள், புத்தொழில் நிறுவனத்தின், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மும்பை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற இந்த தேசிய மாநாட்டின் தொடக்க அமர்வில் சிறப்புரையாற்றிய, அறிவியல், தொழில்நுட்பத் துறையின் செயலாளர் திரு உமேஷ் வி வாக்மரே, குவாண்டம் உயிரித் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். குவாண்டம் உயிரித் தொழில்நுட்பமானது, குவாண்டம் உணர்தல், பிம்பமாக்கல், கணினி அறிவியல் ஆகியவற்றுடன் உயிரி அறிவியல் சந்திக்கும் இடம் என்று அவர் கூறினார்.

இந்தத் துறையில் தேசிய அளவிலான ஆராய்ச்சிகளை வரையறுப்பதற்கும், ஆய்வகங்களிலிருந்து களத்தில் பயன்படுத்தக்கூடிய சுகாதாரத் தொழில்நுட்பம் வரையிலான பாதையை வலுப்படுத்துவதற்கும் ஒரு பல்துறை தளமாக இந்த மாநாடு நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304999&reg=3&lang=1

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305163) வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी