பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
2026 ஜூலை மாதத்திற்கான மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு, கண்காணிப்பு அமைப்பின் 51-வது மாதாந்திர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
31 AUG 2026 4:06PM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை 2026 ஜூலை மாதத்திற்கான மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு, கண்காணிப்பு அமைப்பு குறித்த மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது மத்திய அமைச்சகங்கள், துறைகள் குறித்து வெளியிடப்படும் 51-வது அறிக்கையாகும்.
2026 ஜூலை மாதத்தில் மத்திய அமைச்சகங்கள், துறைகளால் மொத்தம் 2,16,827 குறைகளுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளன. 2026-ம் ஆண்டில் மத்திய அமைச்சகங்கள், துறைகளில் குறைகளுக்கு தீர்வுகாண்பதற்கான சராசரி கால அளவு 12 நாட்களாகும்.
2026 ஜூலை மாதத்தில் மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு, கண்காணிப்பு அமைப்பின் இணையதளம் வாயிலாக மொத்தம் 1,07,186 புதிய பயனர்கள் பதிவுசெய்துள்ளனர். இதில் 17,819 பேர் உத்தரப் பிரதேசத்தில் இருந்தும், 12,982 பேர் மேற்கு வங்கத்திலிருந்தும், 10,156 பேர் மகாராஷ்டிராவில் இருந்தும் பதிவு செய்துள்ளனர். பொதுச்சேவை மையங்கள் மூலம் 9,475 துறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304959®=3&lang=1
***
SS/IR/LDN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305162)
வருகையாளர் எண்ணிக்கை : 9