உரங்கள் துறை
azadi ka amrit mahotsav

மத்திய உரத் துறை, நாளை முதல் செப்டம்பர் 15 வரை தூய்மை இயக்கத்தை நடத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 4:34PM by PIB Chennai

மத்திய உரத் துறை, 2026 செப்டம்பர் 1 முதல் 15 வரை 'ஸ்வச்சதா பக்வாடா-2026' எனப்படும் தூய்மை இயக்கத்தை கடைபிடிக்க உள்ளது. நாடு தழுவிய இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கம், பணியிடங்களில் தூய்மையை அதிகரிப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பது, பணிக் கலாச்சாரத்தை மேம்படுத்துவது ஆகியவை ஆகும். இந்த ஆண்டு, நேரடித் தூய்மையுடன், நிர்வாகத் திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தவும், மின்-பதிவு முறையை மேலும் வலுப்படுத்தவும்  டிஜிட்டல் தூய்மை, ஆவண மேலாண்மை ஆகியவற்றுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

நவீன நிர்வாகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, உரங்கள் துறை டிஜிட்டல் தூய்மைக்காக ஒரு பிரத்யேக உத்தியை வகுத்துள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ், மின்-அலுவலகமும் டிஜிட்டல் கோப்பு அமைப்புகளும் சீரமைக்கப்படும். இதில் நிலுவையில் உள்ள டிஜிட்டல் மின்-கோப்புகளை மதிப்பாய்வு செய்தல், தீர்க்கப்பட்ட குறைகளை டிஜிட்டல் முறையில் முடித்து வைத்தல், தரவுத்தளங்களை முறைப்படுத்துதல் ஆகியவை அடங்கும். மேலும், பணி இடத்தை உகந்ததாக்குவதற்காக, துறைப் பணியாளர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் இன்பாக்ஸ்களில் இருந்து தேவையற்ற, காலாவதியான கோப்புகள் / இணைப்புகளை நீக்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மத்திய உரத் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டாவின் செய்தியுடன் இந்தத் தூய்மை இயக்கம் தொடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304992&reg=3&lang=1

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305158) வருகையாளர் எண்ணிக்கை : 59
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी