பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மையப்படுத்தப்பட்ட பொதுக் குறைதீர்ப்பு குறித்த 48-வது அறிக்கை வெளியீடு - ஜூலை மாதத்தில் 83,324 குறைகளுக்குத் தீர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 4:15PM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தங்கள்பொது மக்கள் குறைதீர்ப்புத் துறைமாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான மையப்படுத்தப்பட்ட பொது மக்கள் குறைதீர்ப்புகண்காணிப்பு அமைப்பின் (சிபிஜிஆர்ஏஎம்எஸ்) 48-வது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜூலை 2026-க்கான இந்த அறிக்கைகுறைகளின் வகைகள் பிரிவுகள் குறித்தும்மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் அவை தீர்க்கப்படும் விதம் குறித்தும் ஒரு விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது.

ஜூலை 2026-ல்மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 1,01,047 குறைகள் பெறப்பட்டு, 83,324 குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டது. ஜூலை 2026-ல்உத்தரப் பிரதேசம் 24,694 என்ற எண்ணிக்கையுடன் அதிகபட்ச குறைகளைத் தீர்த்து வைத்துள்ளது.

இந்த அறிக்கைஜூலை 2026-ம் ஆண்டில் சிபிஜிஆர்ஏஎம்எஸ் இணையதளம் வழியாகப் பதிவு செய்த புதிய பயனர்களுக்கான தரவுகளை வழங்குகிறது. 

குறிப்பிட்ட அந்த அறிக்கைஜூலை 2026-ல் பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட குறைகள் குறித்த மாநில வாரியான பகுப்பாய்வையும் வழங்குகிறது. சிபிஜிஆர்ஏஎம்எஸ் சேவைபொது சேவை மைய இணையதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, 2.5 லட்சம் கிராம அளவிலான தொழில்முனைவோருடன் இணைந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது சேவை மையங்களில் கிடைக்கிறது. ஜூலை 2026-ல் பொது சேவை மையங்கள் மூலம் மொத்தம் 9,475 குறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304972&reg=3&lang=1

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305154) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी