பிரதமர் அலுவலகம்
உஸ்பெகிஸ்தானில் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
30 AUG 2026 5:50PM by PIB Chennai
இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய பங்களிப்பிற்காக, அவருக்கு உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவ் இன்று (30.08.2026) “ஒலிய தராஜலி தோஸ்த்லிக்” (சிறந்த நட்புறவுக்கான உயரிய விருது) என்ற விருதை வழங்கி கௌரவித்தார். இது வெளிநாட்டுத் தலைவர்களுக்கு உஸ்பெகிஸ்தான் அரசு வழங்கும் மிக உயர்ந்த கௌரவமாகும்.
இந்த கௌரவத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, இதனை இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார். இது இரு நாடுகளுக்கும் நாகரிகங்களுக்கும் இடையேயான நீடித்த நட்பின் அடையாளச் சின்னம் என்று அவர் தெரிவித்தார். உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்சியோயேவ் தம்மைப் பற்றிக் கூறிய பாராட்டு வார்த்தைகள், இந்தியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையேயான நீண்டநாள் நட்புறவுக்கும் பாரம்பரியத்திற்கும் ஒரு மரியாதை என்று பிரதமர் குறிப்பிட்டார். மனிதகுலத்தின் மேம்பாட்டிற்காக உலக தென் பகுதி நாடுகளில் ஒன்றான உஸ்பெகிஸ்தானுடன் இணைந்து செயல்பட வேண்டிய கூடுதல் பொறுப்பை இந்தக் கௌரவம் இந்தியாவுக்கு அளிக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.
“ஒலிய தராஜலி தோஸ்த்லிக்” விருது பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டு இருப்பது, இரு நாடுகளுக்கும் இடையே ஆழமாக வேரூன்றிய நாகரிகப் பிணைப்புகளையும், சீராக வலுவடைந்து வரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் விரிவான உத்திசார் ஒத்துழைப்பையும் பிரதிபலிக்கிறது.
***
(Release ID: 2304717)
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304775)
வருகையாளர் எண்ணிக்கை : 77
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada