தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜுலை மாதத்திற்கான தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் தரவுகள் வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 28 AUG 2026 1:35PM by PIB Chennai

நடப்பாண்டின் ஜுலை மாதத்திற்கான தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் தரவுகள் குறித்த முக்கிய அம்சங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மொபைல் போன் சேவையுடன் கூடிய அகண்ட அலைவரிசை இணைப்பைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 189.448 கோடியாக உள்ளது. மொபைல் இணைப்பு இல்லாத அகண்ட அலைவரிசை இணைப்பு கொண்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 100.572 கோடியாக உள்ளது.

நகர்ப்புறங்களில் தொலைப்பேசி இணைப்பைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 79.668 கோடியாக உள்ளது. இதில் கடந்த ஜுலை மாதத்தில் 0.58 சதவீதம் நிகர கூடுதல் எண்ணிக்கை ஆகும்.

ஊரகப்பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதிக்கொண்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 55.759 கோடியாக உள்ளது என்றும் மாதாந்திர வளர்ச்சி விகிதம் ஒட்டுமொத்தமாக 0.28 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜுலை 31-ம் தேதி நிலவரப்படி 1.598 கோடி சந்தாதார்கள் மொபைல் எண் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் கோரிக்கைக்கான விண்ணப்பங்களைச் சமர்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை செயல்பாட்டில் இருந்த கம்பிவட இணைப்பு இல்லாத மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 120.401 கோடியாக இருந்தது என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகைச் சார்ந்த கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கணிப்புகளின் அடிப்படையில் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304128&reg=3&lang=1

***

SS/SV/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2304352) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati