தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஜார்க்கண்டில் பெண் மீது கொதி நீரை ஊற்றி தாக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2026 12:45PM by PIB Chennai

ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டம்போஜ்பூர் கிராமத்தில், மூட நம்பிக்கை சார்ந்த நடைமுறைகளில் ஈடுபட்டதாகக் கூறி பெண்ணை ஒரு குழுவினர் தாக்கியதில்அப்பெண் 40 சதவீத தீக்காயங்களுக்கு உள்ளானதாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அப்பெண் மீது கொதி நீரை ஊற்றி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு கார்வா மாவட்ட ஆட்சியர்காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தற்போதைய உடல்நிலைஅவருக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை குறித்த விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2026 ஆகஸ்ட் 24 அன்று வெளியான ஊடகச் செய்தியின்படிபாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303652&reg=3&lang=1

***

SS/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303888) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी