பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைக்கு அலுவல் மொழிச் சிறப்பு விருது அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2026 1:05PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறை சார்பில், 2025-26-ம் ஆண்டிற்கான அலுவல் மொழி சிறப்பு விருதுக்கு (ராஜ்பாஷா உத்கிருஷ்டா சம்மான்) புதுதில்லியில் உள்ள நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தேர்வு செய்யப்பட்டுள்ளது. 300-க்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட அமைச்சகங்கள், துறைகள் பிரிவில், அலுவல் மொழியை நடைமுறைப்படுத்துதலில் அமலாக்கத்தில் சிறப்பான செயல்பாட்டிற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

இத்துறை 2023-24, 2024-25 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து முதல் பரிசாக ராஜ்பாஷா கீர்த்தி புரஸ்கார் விருதைப் பெற்றது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் முதல் பரிசு பெற்ற துறைகளுக்கு அடுத்த ஆண்டு அதே விருது வழங்கப்படுவதில்லை என்ற விதியின் காரணமாக, இத்துறையின் தொடர்ச்சியான சிறந்த சேவையைப் பாராட்டும் வகையில் இந்த சிறப்பு 'ராஜ்பாஷா உத்கிருஷ்டா சம்மான்' விருது வழங்கப்படவுள்ளது.

இவ்விருது நவிமும்பையில் 2026 செப்டம்பர் 14 அன்று நடைபெறவுள்ள இந்தி தின மாநாட்டில் இத்துறைக்கு முறைப்படி வழங்கப்படவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303663&reg=3&lang=1  

***

SS/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2303838) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada