கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

15 மீட்டர் பல-அச்சு படுக்கை வசதி கொண்ட பேருந்துக்கான முதல் இணக்கச் சான்றிதழை ஐசிஏடி வழங்கியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 26 AUG 2026 2:29PM by PIB Chennai

இந்தியாவின் பயணிகள் போக்குவரத்துத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, சர்வதேச வாகன தொழில்நுட்ப மையமான ஐசிஏடி, மத்திய மோட்டார் வாகன விதிகளின் விதிகளுக்கு இணங்க, ஏஐஎஸ்-119, ஏஐஎஸ்-153 ஆகிய தரநிலைகளின் கீழ் 15 மீட்டர் பல-அச்சு படுக்கை வசதி கொண்ட பேருந்துக்கான தனது முதல் இணக்கச் சான்றிதழை வழங்கியுள்ளது.

 

சினாட்டி ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 15-மீட்டர் பல-அச்சு படுக்கை வசதி கொண்ட பேருந்துக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மிக நீளமான பேருந்து கட்டமைப்புகளில், இந்தச் சாதனை ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

 

 ஐசிஏடி அதிகாரிகள் முன்னிலையில், ஐசிஏடி-ன் இயக்குநர் திரு சௌரப் தலெலா  சினாட்டி ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு நரேஷ் குமார் யாதவ்விடம் முறைப்படி சான்றிதழை வழங்கினார்.

 

இந்த வாகனம், நீண்ட தூரப் பயணிகள் போக்குவரத்திற்காக, கட்டமைப்பு வலிமை, அவசரகாலப் பாதுகாப்பு, தீ விபத்துப் பாதுகாப்பு, சிறந்த பயண வசதி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அம்சங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் பாதுகாப்பான, விதிமுறைகளுக்கு இணக்கமான, மேம்பட்ட பயணிகள் போக்குவரத்து வாகனங்களின் வளர்ச்சிக்கு ஐசிஏடி வழங்கி வரும் தொடர்ச்சியான பங்களிப்பில், இந்தச் சான்றிதழ் மற்றுமொரு முக்கியப் படியாக அமைகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303487&reg=48&lang=1

(Release ID : 2303487)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303540) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi