நிதி அமைச்சகம்
மண்டல கிராமப்புற வங்கிகளின் நிகர லாபம் ரூ.10,176 கோடியாக அதிகரித்துச் சாதனைப் படைத்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
25 AUG 2026 5:47PM by PIB Chennai
மண்டல கிராமப்புற வங்கிகளின் நிகர லாபம் ரூ.10,176 கோடியாக அதிகரித்துச் சாதனைப் படைத்துள்ளது. 2025-26-ம் நிதியாண்டில் அனைத்து மண்டல கிராமப்புற வங்கிகளும் சிறப்பாகச் செயல்பட்டதாக நிதித் துறை கூறியுள்ளது. தற்போது 26 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 700 மாவட்டங்களைச் சேர்ந்த 22,273 கிளைகள் மூலம் 28 மண்டல கிராமப்புற வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த வங்கிகளின் மொத்த வர்த்தகம் கடந்த நிதியாண்டில் ரூ.13.5 லட்சம் கோடியை கடந்துள்ளது. இது சில பொதுத் துறை வங்கிகளின் வணிகத்தைக் காட்டிலும் கூடுதலாகும். 2024-25-ம் நிதியாண்டில் ரூ.6,820 கோடியாக இருந்த ஒருங்கிணைந்த நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் 2025-26-ம் நிதியாண்டில் மண்டல கிராமப்புற வங்கிகளின் நிகர லாபம் ரூ. 10,176 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வங்கிகளின் மொத்த வாராக்கடன், நிகர வாராக்கடன் ஆகிய இரண்டும் முறையே 5.3 சதவீதம், 2.1 சதவீதம் என்ற குறைந்த அளவில் இருந்தன.
2025-26-ம் நிதியாண்டில் 54.98 லட்சத்திற்கும் அதிகமான புதிய பிரதமரின் ஜன்-தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் நிதி சேவைகளை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் மண்டல கிராமப்புற வங்கிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இந்த வங்கிகளின் கடன் வைப்பு விகிதம் 2025-26-ம் நிதியாண்டில் 75.2 சதவீதம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தை எட்டியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303172®=3&lang=1
****
SS/SV/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2303345)
வருகையாளர் எண்ணிக்கை : 12