புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் ரூ.150 கோடிக்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த அறிக்கை வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 25 AUG 2026 4:00PM by PIB Chennai

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் நாட்டைக் கட்டமைப்பதற்கான உள்கட்டமைப்புத் திட்டங்களின் மதிப்பீடு, உள்கட்டமைப்பு, கண்காணிப்பு, பகுப்பாய்விற்கான இணையதளத்தின் வாயிலாக உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இது அமைச்சகங்களுக்கு இடையேயான மேம்பட்டக் கண்காணிப்பு நடவடிக்கைகளைக் குறித்த நேரத்தில் ஆய்வு செய்து தரவுகளின் அடிப்படையில் முடிவெடுப்பதை சாத்தியமாக்குகிறது. 2026 ஜூலை நிலவரப்படி, இந்த இணையதளத்தின் வாயிலாக ரூ.37.11 லட்சம் கோடி மதிப்பிலான 1775 உள்கட்டமைப்புத் திட்டங்களைக் கண்காணித்து வருகிறது.

இந்த உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளுக்கான மொத்தச் செலவு ரூ.19.26 லட்சம் கோடியாக உள்ளது. இது திருத்தியமைக்கப்பட்ட திட்டச் செலவில் 51.91 சதவீதமாகும். இது திட்ட அமலாக்க நடவடிக்கைகளில் உள்ள சீரான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

மொத்த உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளில் 675 திட்டங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், 305 திட்டங்களில் 80 சதவீதம் அளவிற்கு நிதி சார்ந்த நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

செயல்பாட்டில் உள்ள 1775 திட்டங்களில் ரூ.28.77 லட்சம் கோடி தொடக்க மதிப்பீட்டைக் கொண்ட 735 மெகா திட்டங்கள் (ரூ.1000 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டச் செலவு கொண்டவை), ரூ.4.93 லட்சம் கோடி மதிப்பிலான 1040 முக்கியத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303115&reg=3&lang=1

***

SS/SV/GS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303298) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , हिन्दी , English