ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை
azadi ka amrit mahotsav

ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத் துறை, சென்னை ஐஐடி-யில் கெம் கனெக்ட் நிகழ்வை நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 25 AUG 2026 6:25PM by PIB Chennai

ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத் துறை, கெம்கனெக்ட் - 2026 (CHEMCONNECT 2026) நிகழ்வின் முதல் பதிப்பை இன்று, (2026 ஆகஸ்ட் 25), சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நடத்தியது. ரசாயனத் துறையின்கீழ் செயல்படும் உயர் திறன்சார் மையங்களின் பிரதிநிதிகள் உட்பட, தொழில்துறை, கல்வித்துறை, புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத் துறையின் செயலாளர் திரு தேஜ்வீர் சிங்  தலைமை விருந்தினராக பங்கேற்று துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, ரசாயனம் மற்றும் பெட்ரோ இரசாயனத் துறையின் இணைச் செயலாளர் டாக்டர் ஜி வெங்கடேஷ், சிப்பெட் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் பேராசிரியர் ஷிஷிர் சின்ஹா சென்னை ஐஐடி-யின் ரசாயனப் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் இதயராஜா மணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

 துறையின் செயலாளர் திரு தேஜ்வீர் சிங்  இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்ததுடன், சென்னை ஐஐடி-யில் மக்கும் பேக்கேஜிங் பொருட்களுக்கான சிறப்பு மையத்தையும் (பயோபேக்) தொடங்கி வைத்தார். இந்த பயோபேக் மையம், சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் திறன்களில் மேம்பட்ட ஆராய்ச்சிக்கான ஒரு மையமாகச் செயல்படும்.

 

தொடக்கவுரையாற்றிய திரு தேஜ்வீர் சிங், பொருளாதாரத்தின் ஏறக்குறைய அனைத்து உற்பத்தித் துறைகளுக்கும் ஆதாரமாக விளங்கும் ஒரு அடித்தள உந்துசக்தியாக ரசாயனத் துறை வகிக்கும் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். கெம்கனெக்ட் (CHEMCONNECT) நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என்றும் திரு தேஜ்வீர் சிங் அறிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, தொழில்நுட்பத்தை முழுமையாகக் கொண்டு செல்வதில் நிறுவன ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்தார். மேலும், தொழில்துறை தனது பிரச்சனைகளை ஆராய்ச்சி நிறுவனங்களிடம் முன்வைக்கும் 'ரிவர்ஸ் பிச்சிங்' முறை மூலம் ரசாயனத் துறைக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2303212&reg=3&lang=1

(Release ID : 2303212)

****

AD/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303271) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी