ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை
azadi ka amrit mahotsav

சென்னை ஐஐடி-யில் கெம்கனெக்ட் 2026 என்ற தலைப்பில் தொழில்துறை, கல்வித்துறை சார்ந்த நிகழ்வு நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 24 AUG 2026 5:42PM by PIB Chennai

சென்னை ஐஐடி-யில் கெம்கனெக்ட் 2026 என்ற தலைப்பில் தொழில்துறை, கல்வித்துறை சார்ந்த ஒருநாள் நிகழ்வு நாளை நடைபெறுகிறது.

ரசாயனம், பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையால் நிறுவப்பட்ட சிறந்து விளங்கும் 18 மையங்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், ரசாயனம், பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை, சென்னை தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன.

இந்நிகழ்வு ரசாயனம், பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் சிறப்பு மையங்களின் புதுமைக் கண்டுபிடிப்புகளை வர்த்தகமயமாக்கத் தயாராக உள்ள நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்து, உத்திசார் கூட்டாண்மைகளை எதிர்நோக்கியுள்ள தொழில்துறை தலைவர்கள், புத்தொழில் நிறுவனங்கள், குறு சிறு நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் காப்பகங்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு ஒரு தளத்தை அளிக்கும்.

இந்நிகழ்வில் ரசாயனம், பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் வேதிப் பொருட்கள், பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் சிறப்பு மையங்களை அமைத்தல் என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள், முன்மாதிரிகள், காப்புரிமைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும்.

சிறப்பு மையங்களைச் சேர்ந்த முதன்மை ஆய்வாளர்கள் தங்களுடைய பணிகளை அதற்கான அரங்குகளில் காட்சிப்படுத்த உள்ளனர். அத்துடன் கூட்டு முயற்சி, உரிமம் பெறுதல், தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காகத் தொழில்துறை பிரதிநிதிகளுடன் நேரடியாக உரையாட உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302789&reg=3&lang=1

****

SS/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2302900) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी