வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான தற்காலிக சேவை உற்பத்தியாளர் விலைக் குறியீட்டை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
24 AUG 2026 12:00PM by PIB Chennai
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான தற்காலிக சேவை உற்பத்தியாளர் விலைக் குறியீடுகளை 2025 – 26-ம் நிதியாண்டிற்கான நான்காம் காலாண்டின் இறுதி மதிப்பீடுகளை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, வங்கி சார்ந்த சேவைகளின் பங்களிப்பு விகிதம் கடந்த நிதியாண்டில் 4–ம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டின் இறுதி மதிப்பீட்டின்படி 131.5 ஆக இருந்த வங்கி சேவைகளின் குறியீடு, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 134.8 ஆக உயர்ந்துள்ளது. காப்பீடு, தொலைத்தொடர்பு சேவைகள், ரயில்வே பயணியர் சேவைகள் சார்ந்த மதிப்பீட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.
இந்த மதிப்பீடுகளில் முழுமையான சேவைத் துறைகளை உள்ளடக்காத நிலையில், அவற்றுக்கான கணக்கீட்டு எடைகள் வழங்கப்படவில்லை. இருப்பினும் அந்தந்த சேவைகளுக்கான உற்பத்தியாளர் விலைக் குறயீட்டை கணக்கிடுவதற்கான 2022 – 23–ம் ஆண்டின் தரவுகளை அடிப்படையாக பயன்படுத்தி சேவைகள் சார்ந்த மதிப்பீடுகள் கணக்கிடப்பட்டுள்ளன.
சேவைத் துறையை சார்ந்த உற்பத்தியாளர் விலைக் குறியீடுகள் சார்ந்த தரவுகள் அனைத்தும் https://eaindustry.nic.in/download_data_2223.asp என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் 2–ம் காலாண்டிற்கான 7 சேவைகளுக்கான உற்பத்தியாளர் விலைக் குறியீடுகள் நவம்பர் 25-ம் தேதி வெளியிடப்படும் என்ற மத்திய வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302610®=3&lang=1
***
SS/SV/LDN/SH
(रिलीज़ आईडी: 2302843)
आगंतुक पटल : 14