மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
அடுத்த தலைமுறைக்கான புத்தாக்க புத்தொழில் திட்டத்தின் கீழ் 2-ம், 3-ம் நிலை நகரங்களில் உள்ள நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
24 AUG 2026 11:55AM by PIB Chennai
அடுத்த தலைமுறைக்கான புத்தாக்க புத்தொழில் திட்டம் என்பது, ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், புத்தாக்க சிந்தனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான யோசனைகளை, தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தக முயற்சிகளாக மாற்றுவதற்கான தேசிய அளவிலான திட்டமாகும்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டத்தின் 3-வது தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டு, அதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. புத்தொழில் நிறுவனங்கள், புத்தாக்கத் தொழில்முனைவோர் இதில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் 2-ம், 3-ம் நிலை நகரங்களில் உள்ள புத்தொழில் நிறுவனங்களை கண்டறிந்து அவற்றின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சிந்தனையாளர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர்கள் தங்களது யோசனைகளை சோதனைக்குட்படுத்தி தீர்வுகளாக மாற்றுவதற்கு உதவிடும் வகையில் நிதியுதவி வழங்குவதற்கும் வகை செய்யப்படுகிறது.
மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அதன் கீழ் நிறுவப்படும் புத்தொழில் நிறுவனங்கள், தொழில் காப்பகங்கள், தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரை அரசுடன் இணைந்து செயல்படுவதற்கான தளமாக அமைந்துள்ளது. இது நாட்டின் தொழில்நுட்பம் சார்ந்த சூழலமைப்பை வலுப்படுத்துவதற்கும், வடிவமைப்பு, சரிபார்ப்பு நடைமுறைகள் முதல் வர்த்தகமயமாக்கல், விரிவாக்கம் வரையில் பல்வேறு நிலைகளில் புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குகிறது.
அறிவுசார் பகிர்வு, வழிகாட்டுதல், கட்டமைப்பு போன்ற அம்சங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம், புதுமை சார்ந்த தொழில்முனைவை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302611®=3&lang=1
***
SS/SV/LDN/SH
(रिलीज़ आईडी: 2302838)
आगंतुक पटल : 8