தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
இபிஎஃப் வரம்பிற்குள் வராத ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் சிறப்பு ஊழியர் பதிவு முகாம்
प्रविष्टि तिथि:
22 AUG 2026 11:08AM by PIB Chennai
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பதிவிற்கான வரம்பிற்குள் வராத தகுதியுள்ள ஊழியர்களைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு ஊழியர் பதிவு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு நிறுவனங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த முகாம் 2026ஜூன் 29 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த முகாம் 2026 அக்டோபர் 31 வரை செயல்பாட்டில் இருக்கும். 2009 ஏப்ரல் 01 முதல் 2026 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில், பதிவு செய்யாமல் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு இந்த சிறப்பு முகாம் வாயிலாக பதிவு செய்து சமூகப் பாதுகாப்பைப் பெற முடியும். இது வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் தாமாக முன்வந்து விதிமுறைகளைப் பின்பற்றுவதை எளிதாக்குவதையும், தகுதியுள்ள தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், காப்பீடு ஆகியவற்றின் பலன்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிப்பிட்ட காலத்தில் தொழிலாளர் வருங்கால வாய்ப்பு நிதி வரம்பிற்குள் சேர்க்கப்படாமல் விடுபட்ட, ஆனால் அறிவிப்பு வெளியிடப்பட்டத் தேதியில் உயிருடன் இருந்து அந்த நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் தகுதியுள்ள ஊழியர்களின் விபரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்து பதிவு செய்து கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கடந்தகால விதிமுறை சார்ந்த நடைமுறைகள் சரிசெய்வதை எளிதாக்கும் வகையில் குறிப்பிட்ட சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், முன்பு பிடித்தம் செய்யப்படாத ஊழியரின் சந்தா தொகையை தள்ளுபடி செய்வதும் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302247®=3&lang=1
***
SS/SV/RJ
(रिलीज़ आईडी: 2302357)
आगंतुक पटल : 9