இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

போட்டிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக வேளாண் உள்ளீட்டு அமைப்புகள் மீது இந்தியப் போட்டி ஆணையம் அபராதம் விதிப்பு

प्रविष्टि तिथि: 21 AUG 2026 6:42PM by PIB Chennai

2002-ம் ஆண்டு போட்டிச் சட்டத்தின் பிரிவு 27-ன் கீழ், போட்டிக்கு எதிரான கூட்டு வர்த்தக முறைகேடு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, வேளாண் உள்ளீட்டு விற்பனையாளர்கள் சங்கம், வேளாண் உள்ளீட்டு நலச் சங்கம் மற்றும் திரு மன்மோகன் சி. கலந்த்ரி, திரு அரவிந்த்பாய் ஜெராம்பாய் படேல் ஆகியோர் மீது நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத நடவடிக்கைகளை விதித்து இந்தியப் போட்டி ஆணையம் (CCI) இன்று (21.08.2026) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சங்கங்கள் மற்றும் நபர்கள் போட்டிச் சட்டத்தின் பிரிவு 3(1) உடன் இணைந்த பிரிவு 3(3)(பி)-ன் விதிகளை மீறிச் செயல்பட்டுள்ளனர் என்பதை ஆணையம் உறுதி செய்தது.

விதிமீறலின் தீவிரத் தன்மை மற்றும் பல்வேறு காரணிகளை மதிப்பீடு செய்த ஆணையம், வேளாண் உள்ளீட்டு விற்பனையாளர்கள் சங்கத்திற்கு ரூ.81,889, வேளாண் உள்ளீட்டு நலச் சங்கத்திற்கு ரூ.3,92,269, திரு கலந்த்ரிக்கு ரூ.4,98,903, திரு அரவிந்த்பாய் ஜெராம்பாய் படேலுக்கு ரூ.74,717, திரு பிரவின்பாய் படேலுக்கு ரூ.9,177 மற்றும் திரு ரகுவன்ஷிக்கு ரூ.8,622 என அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302081&reg=3&lang=1

(Release ID: 2302081)

****

SS/PLM/SH


(रिलीज़ आईडी: 2302191) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी