ஊரக வளர்ச்சி அமைச்சகம்
கிராமப்புறப் பெண்களின் தொழில்முனைவை ஊக்குவிக்க, இரண்டாம் கட்ட தேசிய தொழில்முனைவோர் இயக்கம் தொடக்கம்
प्रविष्टि तिथि:
21 AUG 2026 6:29PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், தீன்தயாள் அந்த்யோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், இரண்டாம் கட்ட தேசிய தொழில்முனைவோர் இயக்கத்தை இன்று (2026 ஆகஸ்ட் 21) முதல் நவம்பர் 21 வரை மூன்று மாத காலத்திற்குத் தொடங்கியுள்ளது. இதில் பண்ணை, பண்ணை சாரா நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் விரிவான கவனம் செலுத்தப்படுகிறது.
ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் 'உலக தொழில்முனைவோர் தினமாக'க் கொண்டாடப்படும் நிலையில், கிராமப்புறப் பெண்களின் தொழில்முனைவை தீவிரமாக ஊக்குவிக்கும் நோக்கில் இந்த இயக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில், முதல் ஊரகத் தொழில் தொழில்நுட்பச் செய்திமடலான 'சங்கல்ப சக்தி'யை ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளர் திரு ரோகித் கன்சல் வெளியிட்டார். இந்தச் செய்திமடல் இனி மாதந்தோறும் வெளிவரும்.
இந்த இயக்கம், கிராமப்புறப் பெண்களின் தொழில்முனைவை வலுப்படுத்துவதோடு, 6 கோடி இலட்சாதிபதி சகோதரிகளை (Lakhpati Didis) உருவாக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் பங்களிக்கும். விரிவாக்கப்பட்ட இந்தக் கட்டமானது, முதல் கட்டத்தின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, தீவிர தொழில்முனைவோர் வழிகாட்டுதல், முறைப்படுத்துதல், உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்துதல், செயல்முறைகளை எளிமையாக்குதல் ஆகியவற்றின் மீது அதிக கவனம் செலுத்தும். இந்தத் தொடக்க விழாவில் பல்வேறு மாநிலங்களின் அதிகாரிகள் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302066®=3&lang=1
(Release ID: 2302066)
****
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2302176)
आगंतुक पटल : 4