பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
அரசின் செயல்முறை மறுசீரமைப்புக் குறித்த 20-வது இணையவழிக் கருத்தரங்கு
இடுகை இடப்பட்ட நாள்:
21 AUG 2026 4:38PM by PIB Chennai
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள், பொது குறைதீர்ப்புத் துறை, டிஜிட்டல் மாற்றத்திற்கான தொழில்நுட்பப் பயன்பாடு மூலம் அரசு செயல்முறை மறுசீரமைப்பு என்ற கருப்பொருளில் தேசிய அளவிலான இணையவழிக் கருத்தரங்கை நடத்தியது.
இந்தத் துறையின் இணைச்செயலாளர் திரு அவனிஷ் குமார் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் 2026-ம் ஆண்டிற்கான மின்னணு நிர்வாகத்திற்கான தேசிய விருதுகளில் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு தேசிய விருது பெற்ற முன்முயற்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் மத்திய வேளாண் அமைச்சகத்தின் அக்ரிஸ்டேக், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் இ-ஜாக்ரிதி தளம் ஆகியவை அடங்கும்.
தொழில்நுட்பம் சார்ந்த செயல்முறை மறுசீரமைப்பு வாயிலாக வெளிப்படைத்தன்மை மக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கல் நடவடிக்கைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை இந்த முன்முயற்சிகள் விரிவாக எடுத்துரைத்தன.
மத்திய அரசின் டிஜிட்டல் தொழில்நுட்பம் அடிப்படையிலான முன்முயற்சிகள் பாரம்பரிய காகிதப் பயன்பாடு கொண்ட அதிக காலம் எடுத்துக்கொள்ளும் செயல்முறைகளைத் தடையற்ற டிஜிட்டல் முறையிலான அனுபவமாக மாற்றியமைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301987®=3&lang=1
****
SS/SV/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2302139)
வருகையாளர் எண்ணிக்கை : 45