வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தில்லி பெருந்திட்டம் 2047-ஐ மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் வெளியிட்டார்
प्रविष्टि तिथि:
20 AUG 2026 7:24PM by PIB Chennai
மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் ‘தில்லி பெருந்திட்டம் 2047’-ஐ புதுதில்லியில் இன்று வெளியிட்டார். தில்லி துணைநிலை ஆளுநர் திரு தரன்ஜித் சிங் சந்து, முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா ஆகியோர் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், தலைநகரின் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப சுமார் 40 லட்சம் புதிய மலிவு விலை வீடுகளை உருவாக்குவதை இந்தப் பெருந்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துதல், குடியிருப்புகளை மறுசீரமைத்தல், நகர்ப்புறக் கட்டமைப்பு வசதிகளை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, தில்லியை நவீன, நிலைத்தன்மை கொண்ட உலகத்தரம் வாய்ந்த தலைநகரமாக மாற்ற இந்தத் திட்டம் வழிவகுக்கும் என அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301684®=3&lang=1
****
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2301798)
आगंतुक पटल : 9