நிதி அமைச்சகம்
பொதுத்துறை நிதி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் செயல்பாட்டை வலுப்படுத்துவதற்கான பயிலரங்கம்
प्रविष्टि तिथि:
20 AUG 2026 6:18PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை, பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், துறைசார் ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பொது நிதி நிறுவனங்களில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவது குறித்த பயிலரங்கை, 2026 ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பணியாளர் கல்லூரியில் நடத்துகிறது. இந்தப் பயிலரங்கின் இரண்டாவது நாளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதிச் சேவைகளை எளிதில் அணுகும் வாய்ப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.
முதல் நாளான இன்று 100-க்கும் மேற்பட்டோர் பயிலரங்கில் பங்கேற்றனர். இந்திய ரிசர்வ் வங்கி, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் மூத்த மனிதவளத் துறை அதிகாரிகளுடன், 12 பொதுத்துறை வங்கிகள், 7 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் 7 பொதுத்துறை நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301628®=3&lang=1
****
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2301761)
आगंतुक पटल : 6