ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பீகாரில் 11.19 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.13,427 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான்
प्रविष्टि तिथि:
20 AUG 2026 4:03PM by PIB Chennai
பீகாரில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்காக 11,18,937 கான்கிரீட் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ.13,427 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார். இத்திட்டத்தின் மாநில அளவிலான நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். கான்கிரீட் வீடு என்பது செங்கல், சிமெண்டால் மட்டும் உருவாக்கப்படும் கட்டமைப்பு அல்ல என்று தெரிவித்த அவர், குடும்பங்களின் கண்ணியம், பாதுகாப்பு, நம்பிக்கையின் அடையாளம் என்று குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பீகாரில் 24,30,327 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ.29,164 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பீகாரில் செயல்படுத்தப்பட உள்ளதால், வெள்ளம், வறட்சி, கன மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பயிர் இழப்புகளிலிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்றார்.
பெண்களின் பொருளாதார மேம்பாட்டை வலியுறுத்திய அமைச்சர், இலட்சாதிபதி சகோதரிகள், சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்குச் சந்தை வாய்ப்பை உருவாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஷீ-மார்ட்கள் அமைக்கப்படும் என்றார். உற்பத்தி, தயாரிப்பு மேம்பாடு, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் பெண்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பீகாரில் 53.83 லட்சம் விவசாயிகள் அடையாள அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளதையும் அவர் பாராட்டினார். வந்தே மாதரம் தேசத்தின் அடையாளம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301524®=3&lang=1
****
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2301734)
आगंतुक पटल : 9