ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் இயக்கம் 2.0-ன் கீழ் திறன் மேம்பாட்டுக்கான தேசிய பயிலரங்கு நடைபெற்றது
प्रविष्टि तिथि:
20 AUG 2026 5:48PM by PIB Chennai
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர், துப்புரவுத் துறை சார்பில் ஜல் ஜீவன் இயக்கம் 2.0-ன் கீழ் கிராம ஊராட்சிகள், கிராமக் குடிநீர் துப்புரவுக் குழுக்கள், சுஜலாம் சக்தி குழுக்களின் திறன் மேம்பாட்டிற்கான தேசிய பயிலரங்கு புதுதில்லியில் நடைபெற்றது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், பயிற்சி நிறுவனங்கள், துறைசார் வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டு களப்பணியாளர்களுக்கான பயிற்சி முறைகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
இப்பயிலரங்கில் பேசிய தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் இயக்குநர் திரு கமல் கிஷோர் சோன், கிராமப்புறங்களில் குடிநீர் வழங்கல் கட்டமைப்புகளை நீண்ட கால அடிப்படையில் சிறப்பாக நிர்வகிக்க உள்ளாட்சி அமைப்புகளைத் திறன்மிக்கவையாக மாற்றுவது அவசியம் என்றார். மக்களின் பங்களிப்பு, வலுவான தொழில்நுட்பக் கட்டமைப்பு ஆகியவை பாதுகாப்பான குடிநீர் வழங்கலை உறுதிசெய்யும் என அவர் தெரிவித்தார்.
இயக்கத்தின் இணைச் செயலாளர் திருமதி சுவாதி மீனா நாயக் பேசுகையில், நீர் ஆதாரங்களின் நிலைத்தன்மை, நீரின் தரம், பராமரிப்பு, நிதி மேலாண்மையில் சமூகப் பங்களிப்பை ஊக்குவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். டிஜிட்டல் தொழில்நுட்பக் கண்காணிப்பு, தொடர் திறன் மேம்பாடு ஆகியவை கிராம அளவில் சீரான குடிநீர் வழங்கல் சேவைக்கு உதவும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301608®=3&lang=1
****
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2301732)
आगंतुक पटल : 6