வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜூலை 2026-ல் முக்கியத் தொழில்துறைகள் 5.4 சதவீதம் வளர்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 20 AUG 2026 5:00PM by PIB Chennai

முக்கியத் தொழில்துறைகளின் வளர்ச்சிக் குறியீடு, 2022-23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு, 2026-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 5.4 சதவீதமாக உள்ளது என்று மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது. 2026-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 6.0 சதவீத வளர்ச்சி பதிவாகியிருந்தது.

ஜூலை மாதத்தில் இரும்புத் தாது உற்பத்தி 29.5 சதவீதம், சிமெண்ட் 13.1 சதவீதம், மின்சாரம் 9 சதவீதம், நிலக்கரி 7.6 சதவீதம், எஃகு 2.9 சதவீதம், சுத்திகரிப்புப் பொருட்கள் 2.7 சதவீதம் வளர்ச்சி பெற்றன. இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், உரங்கள் ஆகியவற்றில் எதிர்மறை வளர்ச்சி பதிவானது.

இரும்புத் தாது, மின்சாரம், சிமெண்ட் ஆகியவை சமீபத்திய மாதங்களில் முக்கியத் தொழில்துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளன. 2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் முக்கியத் தொழில்துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி 4.3 சதவீதமாக இருந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது 1.5 சதவீதமாக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301558&reg=3&lang=1

****

SS/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2301726) வருகையாளர் எண்ணிக்கை : 49
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi