மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கரில் திலாப்பியா மீன் உற்பத்தியாளர்களுடன் மத்திய மீன்வளத் துறை செயலாளர் உரையாடினார்

प्रविष्टि तिथि: 20 AUG 2026 4:08PM by PIB Chennai

பிரதமரின் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட திலாப்பியா மீன் வளர்ப்புத் தொகுப்புக் குறித்த முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்கான கலந்துரையாடல் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் 2026 ஆகஸ்ட் 20 அன்று நடைபெற்றது. இக்கூட்டம் மத்திய மீன்வளர்ப்புத் துறைச் செயலாளர் டாக்டர் அபிலாக்‌ஷ் லிகி தலைமையில் நடைபெற்றது. அப்போது கள அளவில் உள்ள குறைபாடுகள், சவால்களை அறிந்துகொள்ளும் வகையில் திலாப்பியா வகை மீன் வளர்ப்பாளர்கள், தொழில்முனைவோர்கள், ஏற்றுமதியாளர்கள், இதர சம்மந்தப்பட்டோர்கள் ஆகியோருடன் அவர் உரையாடினார்.

இந்த கலந்துரையாடல் நேரடியாகவும், காணொளி வாயிலாகவும் நடைபெற்றது. இதில் 1,300-க்கும் மேற்பட்ட திலாப்பியா மீன் வளர்ப்பவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். அப்போது பேசிய டாக்டர் அபிலாக்‌ஷ் லிகி, நாட்டின் மீன் வளத்துறையின் வளர்ச்சிக்கு திலாப்பியா மீன் வளர்ப்பவர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார். உலக அளவில் வர்த்தகத் தடைகள் இருந்தபோதிலும், இந்தியா 198 லட்சம் டன் மீன் உற்பத்தியில் ஈடுபட்டும், ரூ.73,890.46 கோடி மதிப்பிலான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்தும் சாதனைப் படைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301530&reg=3&lang=1

 

***

SS/IR/SM/SH


(रिलीज़ आईडी: 2301718) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी