பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மொரீஷியஸ் அரசு அதிகாரிகள் குழு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உடன் சந்திப்பு

प्रविष्टि तिथि: 20 AUG 2026 3:07PM by PIB Chennai

மொரீஷியஸ் நாட்டின் அரசு அதிகாரிகள் குழுவினர், மூத்த தலைமை நிர்வாக அதிகாரி மேரி ஜோயல் சாண்ட்ரின் வலேர் தலைமையில், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை இன்று சந்தித்து கலந்துரையாடினர். தேசிய நல்லாட்சி மையம் ஏற்பாடு செய்துள்ள மொரீஷியஸின் மூத்த அரசு அதிகாரிகளுக்கான 4-வது சிறப்பு திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் இக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

நிர்வாகச் சூழல் வேகமாக மாறி வரும் நிலையில், திறன் மேம்பாடு வழக்கமான பயிற்சியைத் தாண்டி, தொடர்ச்சியான பணிப் பொறுப்பு, திறன் அடிப்படையிலான கற்றலாக மாற வேண்டும் என டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். இந்தியா, மொரீஷியஸ் இடையேயான பொது நிர்வாக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தேசிய நல்லாட்சி மையம், மொரீஷியஸ் பொதுச் சேவை, நிர்வாகச் சீர்திருத்த அமைச்சகத்துடன் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, 5 ஆண்டுகளில் மொரீஷியஸ் அரசின் 500 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இரு நாடுகளும் புத்தாக்கம், மக்களை மையமாகக் கொண்ட நல்லாட்சி, டிஜிட்டல் மாற்றம் ஆகிய துறைகளில் அமைப்பு ரீதியான தொடர்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301506&reg=3&lang=1

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2301698) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी