பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் நல திட்டங்கள் பயனாளிகளைச் சென்றடைவதுக் குறித்துப் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர் ஆய்வு செய்தார்

प्रविष्टि तिथि: 20 AUG 2026 10:52AM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர் திருமதி ரஞ்சனா சோப்ராவும், கூடுதல் செயலாளர் திரு மணிஷ் தாகூரும் ஆய்வு செய்தனர். மத்தியப் பழங்குடியினர் நலத்துறையின் முக்கியத் திட்டங்கள் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்வதும், பழங்குடியின பயனாளிகளுடன் நேரடியாக உரையாடுவதும் இப்பயணத்தின் நோக்கமாகும்.

இந்தூரில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிடப் பள்ளியை அவர்கள் முதலில் பார்வையிட்டனர். அங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்களுடன் செயலாளர் உரையாடினார். நாள்தோறும் கற்பித்தல் பணியில் டிஜிட்டல் நவீன வகுப்பறையைப் பயன்படுத்துவதை அவர் பார்வையிட்டார். பின்னர், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, கர்கோன் மாவட்டத்தின் மகேஸ்வரில் ஆதரவுக் குழுவால் நடத்தப்படும் பங்கர் மையத்தை இக்குழுப் பார்வையிட்டது. அங்குப் பழங்குடியின பெண்கள் நாள்தோறும் புகழ்பெற்ற மகேஸ்வரி சேலைகளைச் சுமார் 1,000 முதல் 2,000 என்ற எண்ணிக்கையில் நெசவு செய்து வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301418&reg=3&lang=1

***

SS/IR/SM/RJ


(रिलीज़ आईडी: 2301528) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी