அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

புற்றுநோய் செல்களில் மட்டும் செயல்படும் மேம்பட்ட மருந்து, கீமோதெரபி சிகிச்சைக்கு மாற்றாக அமைய வாய்ப்பு

प्रविष्टि तिथि: 19 AUG 2026 7:18PM by PIB Chennai

புற்றுநோய் செல்களுக்குள் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய மேம்பட்ட புற்றுநோய் மருந்து, வழக்கமான கீமோதெரபி மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், கீமோதெரபி சிகிச்சை முறை பல்வேறு சமயங்களில், ஆரோக்கியமான செல்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது, பாதிக்கப்பட்டுள்ள செல்களுடன் ஆரோக்கியமான செல்களும் பெரும்பாலும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. இதன் காரணமாக, குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, புற்றுநோய்க்கான மருந்து உடலுக்குள் செலுத்தப்படும்போது, சாதாரண திசுக்களில் செயலற்ற நிலையில் இருந்து, கட்டி உள்ள இடங்களில் மட்டும் குறிப்பாகச் செயல்படக்கூடிய வகையில், இலக்கை மையமாகக் கொண்ட சிகிச்சை முறைகள் அவசியமாகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு விஞ்ஞானிகள் ஒரு முக்கிய முயற்சியை மேற்கொண்டனர். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான 'அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உயர் ஆய்வு நிறுவனம்' (IASST)-ஐச் சேர்ந்த டாக்டர் ஆசிஸ் பாலா, குவாஹாட்டி இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே.பி. பாபக் ஆகியோர் தலைமையில் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், 'ஆர்கே-251' (RK-251) எனப்படும் புதிய மேம்பட்ட புற்றுநோய் மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து முக்கியமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள செல்களில் மட்டுமே செயல்படும் வகையிலும், ஆரோக்கியமான செல்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301318&reg=3&lang=1

(Release ID: 2301318)

****

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2301393) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी