பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிப்ரவரி 2027-ல் புதுதில்லியில் 5-வது கடலோரக் காவல்படை உலகளாவிய உச்சிமாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது

प्रविष्टि तिथि: 19 AUG 2026 8:34PM by PIB Chennai

இந்தியக் கடலோரக் காவல்படையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, 2027 பிப்ரவரி மாதம் புதுதில்லியில் 5-வது கடலோரக் காவல்படை உலகளாவிய உச்சிமாநாட்டை (CGGS) இந்தியா நடத்தவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, பணிநிலை ஆலோசனைக் கூட்டத்தை இந்தியக் கடலோரக் காவல்படை இன்று நடத்தியது.

நேரடியாகவும், காணொலிக் காட்சி வாயிலாகவும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வரவிருக்கும் உச்சிமாநாட்டின் முக்கிய நிறுவன மற்றும் அமைப்புசார் அம்சங்கள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சிஜிஜிஎஸ் கூட்ட வழிகாட்டுதல்களைச் செம்மைப்படுத்துதல், தகவல் பகிர்வு வழிமுறையை வலுப்படுத்துதல் மற்றும் சிஜிஜிஎஸ் இணையதளத்தின் மேம்பாடு ஆகியவை அடங்கும். தொழில்முறை நிபுணத்துவம், செயல்பாட்டு அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றின் பரந்த பரிமாற்றம் மூலம் கூட்டுத் திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதற்கான வழிகளும் விவாதிக்கப்பட்டன.

5-வது உச்சிமாநாட்டிற்கான நிறுவன ரீதியான முன்னேற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவும், பங்கேற்கும் கடல்சார் முகமைகளுக்கு இடையே உரையாடல் மற்றும் ஒருங்கிணைப்பை எளிதாக்கவும் பணிநிலைக் கூட்டம் ஒரு முக்கிய தளத்தை உருவாக்கியது. மேலும், பங்கேற்கும் முகமைகளுக்கு இடையே நீடித்த ஒத்துழைப்பை ஊக்குவிப்பதையும் கடல்சார் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட, எதிர்காலக் கூட்டுச் செயல்பாடுகளுக்கான முன்மொழியப்பட்ட செயல்பாட்டுக் கால அட்டவணையும் கூட்டத்தின்போது ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301355&reg=3&lang=1

****

SS/BR/SH


(रिलीज़ आईडी: 2301392) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali