பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆர்மீனியாவிற்கான பாதுகாப்புச் செயலாளரின் இரண்டு நாள் பயணம் நிறைவு

प्रविष्टि तिथि: 19 AUG 2026 8:23PM by PIB Chennai

பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் 2026 ஆகஸ்ட் 17 முதல் 18 வரை ஆர்மீனியா நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது, ஆர்மீனியாவின் துணைப் பாதுகாப்பு அமைச்சர் திரு கரன் புருட்யான் மற்றும் அந்நாட்டின் ராணுவத் தளபதி திரு எட்வர்ட் அஸ்ரியான் ஆகியோருடன் அவர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

திறன் மேம்பாடு, பயிற்சி, ராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, நடைபெற்று வரும் பாதுகாப்பு மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான விஷயங்களை இந்தக் கலந்துரையாடல்கள் உள்ளடக்கியிருந்தன. இந்திய மற்றும் ஆர்மீனிய ஆயுதப் படைகளுக்கு இடையே கூட்டுப் படைப் பணியாளர் பேச்சுவார்த்தைகளை நிறுவனமயமாக்குவதற்கான வரையறைகளையும் இரு தரப்பினரும் பரிமாறிக்கொண்டனர்.

ஆர்மீனியாவின் உயர் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு டேவிட் ட்ராடெவோஸ்யனைச் சந்தித்து, பாதுகாப்புத் துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்மொழிவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார். இந்த நிகழ்வின்போது கூட்டு ஒத்துழைப்பு, புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இரு நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையே கையெழுத்தானது.

ஆர்மீனியாவின் பாதுகாப்பு அமைச்சர் திரு சுரேண் பாபிக்யானை திரு ராஜேஷ் குமார் சிங் சந்தித்தபோது, இந்தியா-ஆர்மீனியா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தியதுடன், ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் விவாதித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301346&reg=3&lang=1

****

SS/BR/SH


(रिलीज़ आईडी: 2301385) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu