ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் நான்கு ரயில்வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 19 AUG 2026 3:20PM by PIB Chennai

ரயில்வே அமைச்சகத்தின் சுமார் ரூ.9,450 கோடி செலவிலான நான்கு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

கும்மிடிப்பூண்டி-கூடூர் 3-வது, 4-வது வழித்தடம்-90 கிலோ மீட்டர் (ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு)

காரக்பூர்-பத்ராக் (ராணிடால்) 4-வது வழித்தடம்-173 கிலோ மீட்டர் (மேற்கு வங்கம், ஒடிசா)

பத்ராக்-ஹரிதாஸ்பூர் 4-வது வழித்தடம்-75 கிலோ மீட்டர் (ஒடிசா)

கட்டாக்-பாரதீப் (படபந்தா) 3-வது, 4-வது வழித்தடம்-72 கிலோ மீட்டர் (ஒடிசா) ஆகிய இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை 2030-31-ம் ஆண்டிற்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எட்டு மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படுத்தப்படவுள்ள இந்த நான்கு திட்டங்களால் இந்திய ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பு சுமார் 410 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கும்.  இந்தப் பல்தடத் திட்டங்கள் சுமார் 60 லட்சம் பேர் வசிக்கும் 6,448 கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்தும்.

இத்திட்டங்களால் குல்திஹா வனவிலங்கு சரணாலயம், பிட்டார்கனிகா தேசியப் பூங்கா, மா பத்ரக்காளி கோவில், மா தமாரைக் கோவில், பஞ்சலிங்கேஸ்வர் கோவில், தல்சாரி-உதய்பூர், சந்திப்பூர் கடற்கரை, பழவேற்காடு ஏரி, நெலப்பட்டு பறவைகள் சரணாலயம், பகவான் வீரராகவ பெருமாள் கோவில், கடா குஜங்கா ஜகன்நாதர் கோவில், சரளா கோவில், தபாலேஸ்வர் கோவில், லலித்கிரி (புத்த தலம்) உள்ளிட்ட நாட்டின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு ரயில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301143&reg=3&lang=1

***

SS/IR/SU/SH    


(रिलीज़ आईडी: 2301310) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Kannada , Malayalam