இந்திய போட்டிகள் ஆணையம்
அக்கோ டெக்னாலஜி & சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை ஜெனரல் அட்லாண்டிக் சிங்கப்பூர் ஏசிகே பிரைவேட் லிமிடெட் கையகப்படுத்த சிசிஐ ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
18 AUG 2026 6:45PM by PIB Chennai
அக்கோ டெக்னாலஜி & சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை ஜெனரல் அட்லாண்டிக் சிங்கப்பூர் ஏசிகே பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்துவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
அக்கோ டெக்னாலஜி & சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டுள்ள உரிமைப் பங்கு வெளியீட்டின் ஒரு பகுதியாக, சாத்தியமான அனைத்துப் பங்கு மாற்றங்களையும் கணக்கில் கொண்டு கூடுதல் பங்குகளைக் கையகப்படுத்துவதன் மூலம் 25 சதவீத உச்சவரம்பைக் கடப்பதை முன்மொழியப்பட்ட இந்த ஒருங்கிணைப்பு உள்ளடக்கியுள்ளது.
ஜெனரல் அட்லாண்டிக் சிங்கப்பூர் ஏசிகே பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்பது சிங்கப்பூர் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு முதலீட்டு ஹோல்டிங் நிறுவனமாகும். இது, உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு மூலதனம் மற்றும் உத்திசார் ஆதரவை வழங்கும் ஜெனரல் அட்லாண்டிக் முதலீட்டு நிதிக் குழுமத்துடன் தொடர்புடையது.
அக்கோ டெக்னாலஜி & சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு காப்பீட்டுத் தொழில்நுட்பத் தனியார் நிறுவனமாகும். இது, இந்தியாவில் அஷ்யூர்லிங்க், அக்கோ பொதுக் காப்பீடு மற்றும் அக்கோ ஆயுள் காப்பீடு ஆகிய மூன்று முழுமையான துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2300956®=3&lang=1
****
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2301020)
வருகையாளர் எண்ணிக்கை : 34