ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் ‘வலிமையின் 7 அம்சங்கள்’ தொலைநோக்குப் பார்வையை நனவாக்க வேளாண்மை, ஊரக வளர்ச்சித் துறை செயல்படும்: மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான்

प्रविष्टि तिथि: 18 AUG 2026 6:22PM by PIB Chennai

நாட்டின் 80-வது சுதந்திர தின உரையின் போது செங்கோட்டையிலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்த ‘வலிமையின் 7 அம்சங்கள்’ தொலைநோக்குப் பார்வையைச் செயல்படுத்தும் வகையில், மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி அமைச்சகங்களின் சார்பில் புதுதில்லியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய வேளாண்மை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துறைசார்ந்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், விவசாயிகள், சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிர், உணவுப் பதனப்படுத்துவோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் வேளாண்மை, உணவுப் பதனப்படுத்துதல் துறைகள் முக்கிய தூண்களாகத் திகழ்கின்றன என்றார். வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதுடன், சர்வதேசத் தரத்திற்கு ஏற்ப விளைபொருட்களின் தரம், பாதுகாப்பை உறுதி செய்து இந்திய விவசாயிகளின் தயாரிப்புகளை உலகளாவிய சந்தைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விவசாயிகளின் வருவாயை உயர்த்துவது, கிராமப்புற மகளிருக்கு அதிகாரம் அளிப்பது ஆகியவை மத்திய அரசின் முக்கிய முன்னுரிமைகளாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூன்று கோடி கிராமப்புற பெண்களை லட்சாதிபதிகளாக மாற்றும் இலக்கு வெற்றிகரமாக எட்டப்பட்டுவிட்ட நிலையில், தற்போது ஆறு கோடி பெண்களை லட்சாதிபதிகளாக உயர்த்தும் புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இயற்கை விவசாயம், நுண்ணீர்ப்பாசனம், பயிர் பல்வகைப்படுத்தல், நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து விவசாயிகளின் வருவாயைப் பெருக்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2300942&reg=3&lang=1 

****

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2301013) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी