புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2026 ஜூலை மாதத்திற்கான தொழிலாளர் ஆய்வு மாதாந்திர அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
17 AUG 2026 4:00PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்படும் காலமுறை தொழிலாளர் ஆய்வுக் கணக்கீடு, வேலைவாய்ப்பு, வேலையின்மை நிலைகள் குறித்த தரவுகளின் முதன்மை ஆதாரமாக விளங்குகிறது. நாட்டின் தொழிலாளர் சக்தி குறியீடுகளின் மாதாந்திர மதிப்பீடுகளை வழங்குவதற்காக, இந்தக் கணக்கெடுப்பு முறையானது ஜனவரி 2025 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கீட்டின் மாதாந்திர முடிவுகள், மாதாந்திர அறிக்கைகள் வடிவில் வெளியிடப்படுகின்றன.
ஏப்ரல் 2025 முதல் ஜூன் 2026 வரையிலான மாதாந்திர அறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. ஜூலை 2026-க்கான தற்போதைய மாதாந்திர அறிக்கை, இந்தத் தொடரில் 16-வது, இப்போது வெளியிடப்பட்டு உள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள்:
* 15 வயது, அதற்கு மேற்பட்டோருக்கான தொழிலாளர் பங்கேற்பு விகிதம், ஜூன் 2026-ல் 54.4 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலை 2026-ல் 55.4 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும், இது முறையே 58%, 50.4 % என உள்ளது.
* பெண்களுக்கான ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம், ஜூன் 2026-ல் பதிவான 32.7 சதவீதத்திலிருந்து ஜூலை 2026-ல் 34.4 சதவீதமாகக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. அதே காலகட்டத்தில், கிராமப்புறப் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 36.6 சதவீதத்திலிருந்து 38.8 சதவீதமாகவும், நகர்ப்புறப் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 24.8 சதவீதத்திலிருந்து 25.3 சதவீதமாகவும் உயர்ந்தன.
* ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம், ஜூன் 2026-ல் இருந்த 5.5 சதவீதத்திலிருந்து ஜூலை மாதத்தில் 5.1சதவீதமாகக் குறைந்தது. கிராமப்புறங்களில், வேலையின்மை விகிதம் முந்தைய மாதத்தில் இருந்த 5.0 சதவீதத்திலிருந்து ஜூலை மாதத்தில் 4.5சதவீதமாகக் கணிசமாகக் குறைந்தது. அதே காலகட்டத்தில், நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.6 சதவீதத்திலிருந்து 6.7சதவீதமாகமாறிய நிலையில், ஏறக்குறைய நிலையாகவே இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300447®=3&lang=1
****
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2300664)
வருகையாளர் எண்ணிக்கை : 34