சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
ஒப்பந்தத் தூய்மைப் பணியிலிருந்து சுயதொழில்: சதீஷ் குமாரின் பொருளாதார அதிகாரமளித்தல் பயணம்
प्रविष्टि तिथि:
17 AUG 2026 3:53PM by PIB Chennai
உத்தரப் பிரதேசம், காசியாபாத்தைச் சேர்ந்த 54 வயதான முன்னாள் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர் திரு சதீஷ் குமார், 'நமஸ்தே' திட்டத்தின் கீழ், நிதியுதவி பெற்று, தற்போது சொந்தமாக கழிவுநீர் அகற்றும் இயந்திர வாகனம் வைத்துள்ள சுயதொழில் முனைவோராக மாறியுள்ளார்.
முன்பு ஒப்பந்தப் பணியாளராக மாதத்திற்கு ரூ.13,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே ஈட்டியதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டது. காசியாபாத் மாநகராட்சி மூலம் தூய்மை தொழில்முனைவோர் திட்டத்தைப் பற்றி அறிந்த அவர், கனரா வங்கியிலிருந்து ரூ.5.91 லட்சம் கடனும், தேசிய தூய்மைப் பணியாளர்கள் நிதி மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து ரூ.3.64 லட்சம் மானியமும் பெற்று மொத்தம் ரூ.9.55 லட்சத்தில் கழிவுநீர் அகற்றும் இயந்திரத்தை வாங்கினார்.
தற்போது சொந்தமாக இயந்திரத்தை இயக்கி மாதத்திற்கு சுமார் ரூ.50,000 ஈட்டுவதுடன், அனைத்து செலவுகளும் போக மாதந்தோறும் ரூ.25,000 வரை சேமித்து குடும்பத்திற்குப் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300439®=3&lang=1
****
SS/EA/SH
(रिलीज़ आईडी: 2300639)
आगंतुक पटल : 9