பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசு அதிகாரிகள் அதிக சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

प्रविष्टि तिथि: 17 AUG 2026 4:53PM by PIB Chennai

தேசிய பாதுகாப்பு சொத்துக்கள் மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சிப் பெற்றுவரும் இந்திய பாதுகாப்புத்துறை சொத்துக்கள் சேவையின் (2025 பிரிவு) பயிற்சி அதிகாரிகள் 2026 ஆகஸ்ட் 17 அன்று புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர்.

நாடு முழுவதுமுள்ள பாதுகாப்புத்துறை நிலங்களை நிர்வகிப்பதிலும், படை வீரர்களின் குடியிருப்பு வாரியங்களின் நிர்வாகத்தை மேற்கொள்வதிலும் பாதுகாப்பு சொத்துக்கள் துறை மேற்கொண்டுவரும் பங்களிப்பை அமைச்சர் அப்போது பாராட்டினார்.

மக்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் அரசு ஊழியர்களின் பங்களிப்பை திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையுடன் சேவைகளை அளிப்பதில் அரசு அதிகாரிகள் அதிக சேவை மனப்பான்மையுடன் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

அத்துடன் மக்களின் குறைகளை அறிவதற்கும் நம்பிக்கையைப் பெறுவதற்கும் அதிகாரிகள் மக்களைத் தொடர்ந்து சந்திக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அரசு ஊழியர்களும் இளைய அதிகாரிகளும் தங்களது உடல், மனம் ஆகியவற்றில் சமமாக கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். ஆன்மீகப் பாதையை கடைபிடிக்குமாறும், தியானத்தில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300489&reg=3&lang=1

****

SS/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2300630) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी