சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிதி நெருக்கடியிலிருந்து உலகளாவிய ஆராய்ச்சி அனுபவம் வரை: பிரியங்கா என்ற மாணவியின் முனைவர் பட்டப் படிப்பைத் தொடர வழிவகுத்த உதவித் தொகைத் திட்டம்

प्रविष्टि तिथि: 16 AUG 2026 5:21PM by PIB Chennai

நிதிச் சிக்கல்களும் குடும்ப அழுத்தமும், உயர்கல்வியையும் ஆராய்ச்சியையும் தொடர விரும்பும் சிறந்த மாணவர்களுக்குச் சவால்களாக மாறக்கூடும்.

ஆய்வு உதவித்தொகை, உயர்கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் எவ்வாறு துணைபுரியும் என்பதற்கு உதாரணமாக, புதுச்சேரியைச் சேர்ந்த 27 வயதான முனைவர் பட்ட ஆய்வாளர் செல்வி பிரியங்கா விளங்குகிறார்.

பட்டியல் வகுப்பினருக்கான தேசிய உதவித்தொகை திட்டத்தின் பலனைப் பெறுவதற்கு முன்பு அவர் நிதிச் சுமையையும் குடும்ப அழுத்தத்தையும் எதிர்கொண்டார். இந்தச் சவால்கள் இருந்தபோதிலும், அவர் ஆராய்ச்சியில் உறுதியாக இருந்தார். மேலும் தனது கல்வி வளர்ச்சிக்காக அரசு உதவித்தொகையைப் பயன்படுத்திக்கொள்ள அவர் விரும்பினார்.

அவருக்கு ஆய்வு உதவித்தொகை 2022 நவம்பரில் கிடைக்கத் தொடங்கியது. இந்த ஆய்வு உதவித்தொகை, அவருடைய முனைவர் பட்டப் படிப்பின் பயணத்தின் போது இருந்த நிதிச் சிக்கல்களைப் பெருமளவில் குறைத்து, ஆராய்ச்சி தொடர்பான செலவுகளைச் சமாளிக்க அவருக்கு உதவியது. இதன் மூலம், ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையிலான விலையுள்ள ஆராய்ச்சிப் பொருட்களை அவரால் தயக்கமின்றி வாங்க முடிந்தது. இது அவருடைய ஆராய்ச்சிப் பணிகளுக்கு மேலும் திறம்பட உதவியது.

இந்த ஆய்வு உதவித்தொகை, பிரியங்கா வெளிநாடுகளில் நடைபெற்ற இரண்டு சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்ளவும் வழிவகுத்தது. அங்கு அவர் சர்வதேச கல்விசார் அனுபவத்தைப் பெற்றார். தனது பெற்றோரைக்கூட தன்னுடன் அழைத்துச் செல்ல அவரால் முடிந்தது. இந்த ஆய்வு உதவித்தொகையின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது என்றும் அவர் குறிப்பிடுகிறார். மேலும், இந்தியாவில் நடைபெற்ற 10-க்கும் மேற்பட்ட சர்வதேச மாநாடுகளில் அவர் தனது ஆய்வுப் படைப்புகளைச் சமர்ப்பித்துள்ளார்.

நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும், மேம்பட்ட ஆராய்ச்சியைத் தொடர ஆய்வு உதவித்தொகை ஆதரவு எவ்வாறு உதவும் என்பதை பிரியங்காவின் பயணம் எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300193&reg=48&lang=1

***

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2300236) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada